மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்!

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்!

ரயிலிலும், ரயில் வளாகத்திற்குள்ளும் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரவி வருவதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதிலும், அதிகமாக மக்கள் கூட்டம் சேரும் விஷயங்களுக்கும் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல் உள்ளிட்டவற்றிற்கு அந்தந்த மாநில அரசுகள் அபராதம் விதித்து வருகின்றன. அதன்படி அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்முறை முகக்கவசம் இல்லாமல் சிக்குபவர்களிடம் ரூ, 1000மும், அடுத்தடுத்து முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று, தெலங்கானாவிலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்கள் தங்களுக்கேற்ப அபராதம் விதித்து வருகின்றன. சென்னையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200மும், சமூக இடைவெளி பின்பற்றாதது மற்றும் பொதுஇடங்களில் எச்சில் துப்புதல் உள்ளிட்டவற்றிற்கு ரூ.500மும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” . 2020, மே 11ஆம் தேதி ரயில்வே கொண்டு வந்த நிலையான வழிகாட்டல் விதிகளின்படி, ரயில்களில் பயணிக்கும் பயணிகளும், ரயில்நிலையத்துக்குள் வரும் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் ரயில்நிலையத்துக்குள் வரும் பயணிகள், உடன் வருவோருவர்களுக்கு ரயில்வே சட்டத்தின்படி ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். அதுபோன்று, ரயில்வே வளாகத்தில் எச்சில் துப்புதல் உள்ளிட்ட வளாக தூய்மையை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு ஆறு மாதம் அல்லது மறு உத்தரவு வரும்வரை நடைமுறையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 17 ஏப் 2021