மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

விவேக் மரணம் இயற்கைக்கு இழப்பு: நீலகிரி ஆட்சியர்!

விவேக் மரணம் இயற்கைக்கு இழப்பு: நீலகிரி ஆட்சியர்!

நடிகர் விவேக்கின் மரணம் இயற்கைக்கு ஏற்பட்ட இழப்பு என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நடிப்பு மட்டுமில்லாமல், சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக, மரக்கன்றுகளை நடுதல், அதுகுறித்தான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வந்தார்.

அப்துல் கலாம் அவர்களின் மீதான பற்றின் காரணமாக மரம் நடுவதை தொடங்கிய நடிகர் விவேக், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டு, தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், மழை பெய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “உயிர்ச்சூழல் மண்டலமான நீலகிரியை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதிலும் நடிகர் விவேக் பெரும் பங்காற்றியுள்ளார். நீலகிரியில் மரம் நடும் விழாவில் சுமார் நான்கு முறை பங்கேற்றுள்ளார். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 4 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டார்.

உதகையில் எல்லநல்லி, கோத்தகிரி, காந்தல், போன்ற பகுதிகளில் அதன் மண்ணிற்கேற்ப சோலை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை நடிகர் விவேக் தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது, என்னை மிகவும் பாதித்துள்ளது. அவரின் மறைவு இயற்கைக்கு பெரிய இழப்பு” என தெரிவித்துள்ளார்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 17 ஏப் 2021