மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!

ஜூஸ் என்றால் பழங்கள் மட்டுமல்ல; காய்கறிகளையும் ஜூஸை செய்துஅருந்தலாம். தற்போதைய கொரோனா பரவலில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த ஜூஸ் ஏற்றது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். அனைவருக்கும் நன்மை தரும் இந்த மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டு அரை டீஸ்பூன் ஓமத்தை ஊறவைக்கவும். கேரட், தக்காளி தலா மூன்று, பீட்ரூட் ஒன்று, பாகற்காய் சிறியது ஒன்று, சுரைக்காய் சிறியது ஒன்று, முட்டைக்கோஸ் 25 கிராம், இஞ்சி மிகச் சிறிய துண்டு ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ஓமத்தண்ணீர், எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து மீண்டும் அரைக்கவும். தேவைப்பட்டால் ஐஸ் துண்டுகள் சேர்த்து பருகலாம்.

சிறப்பு

இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல்பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 17 ஏப் 2021