மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

பணம் பறிமுதல் : தமிழகம் முதலிடம்!

பணம் பறிமுதல் : தமிழகம் முதலிடம்!

இதுவரை இல்லாத அளவு, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், 1,000 கோடி ரூபாய் மதிப்புக்கு மேல், பணம், மது பாட்டில்கள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மேற்குவங்கத்தில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் உள்ளன.

இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டு, பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் தான், அதிகபட்சமாக, 446.28 கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான பணம்,நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில், 300 கோடி ரூபாய், அசாமில், 122.35 கோடி ரூபாய், கேரளாவில், 84.91 கோடி ரூபாய், புதுச்சேரியில், 36.95 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 15 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ஐந்து மாநிலங்களில் ரூ.345 கோடி ரூபாயும், ரூ.85 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ.139 கோடி மதிப்பிலான இலவச பொருட்களும், ரூ.162 கோடி மதிப்பிலான மருந்துகளும், ரூ.271 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்குவங்கத்தில் இதுவரை ரூ.51 கோடி ரொக்க பணமும், ரூ.30 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ.88 கோடி மதிப்பிலான இலவச பொருட்களும், ரூ. 119 கோடி மதிப்பிலான மருந்துகளும்(drugs)ரூ.12 கோடி மதிப்பிலான உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரொக்க பணம் பறிமுதலில் தமிழகமும் (ரூ.237 கோடி), மதுபான பாட்டில்களில் அசாமும்(ரூ.42 கோடி), மருந்துகளில் மேற்குவங்கமும்(ரூ.119 கோடி), இலவச பொருட்களில் மேற்குவங்கமும் (ரூ.88 கோடி), விலை உயர்ந்த உலோகங்களில் தமிழகமும் (ரூ.176 கோடி)

முதலிடத்தில் உள்ளன.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் 5 சிறப்பு செலவின பார்வையாளர்களையும், 321 செலவின பார்வையாளர்களையும் நியமித்தது. 259 தொகுதிகளில் அதிகளவில் செலவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் ஒப்பீடும்போது, 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு 343 சதவிகிதம் அதிகமாகும். 2016ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக ரூ.226 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 17 ஏப் 2021