மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அறிக்கையில் சென்னை மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இல்லாததால், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும்(ஏப்ரல் 16) நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஆட்சியர் கையெழுத்து இல்லாமல், அவரின் தனி உதவியாளர் கையெழுத்து இருந்ததை நீதிபதி கவனித்தார்

மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெளிவாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் ‘ஆட்சியருக்காக’ என்ற குறிப்புடன் வேறு ஒரு நபர் கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஏன் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

வினிதா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

சனி 17 ஏப் 2021