மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

நீட் தேர்வு ஒத்திவைப்பு: ப்ளஸ் 2 தேர்வு?

நீட் தேர்வு ஒத்திவைப்பு: ப்ளஸ் 2 தேர்வு?

நாடெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவும் நிலையில் முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. திமுக தலைவர் ஸ்டாலின், “கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து வரும் நிலையில் அனைத்து இடர்களையும் எதிர்த்து மருத்துவர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்த இதுதான் சரியான நேரமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தச் சூழலில் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா காரணமாக முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இளம் மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்கப்படுகிறது. புதிய தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வு, நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 16 ஏப் 2021