மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 16) ஒரே நாளில் மட்டும் 8449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5,116 பேர் ஆண்கள், 3,333 பேர் பெண்கள். மொத்தமாக இதுவரை 9,71,384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 33 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 33 பேரில் 11 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,96,759 ஆக அதிகரித்துள்ளது. 61,593 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 97,201 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 2636 பேரும், செங்கல்பட்டில் 795 பேரும், கோவையில் 583 பேரும், திருவள்ளூரில் 453 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 5ஆம் தேதி 128 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 12 வயதுக்குட்பட்ட 250க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 16 ஏப் 2021