மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கொரோனா காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக நீட் தேர்வு, சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பரவலுக்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரிகள் தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் தள்ளி வைத்தும், தள்ளி வைப்பதற்கான ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த செய்முறை தேர்வுகள் உட்பட அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது தெரியவில்லை.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 16 ஏப் 2021