மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயம்: நீலகிரி கலெக்டர் உத்தரவு!

படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயம்: நீலகிரி கலெக்டர் உத்தரவு!

நீலகிரி வரும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயம் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

மலை மாவட்டமான நீலகிரி இயற்கை அழகுடன் காட்சி அளிப்பதால், இங்கு தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளைைப் பின்பற்றி படப்பிடிப்புக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, “சினிமா படப்பிடிப்புக்காக நீலகிரி வரும் குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று பாதிப்பு இல்லை என்று சான்றை கொண்டு வர வேண்டும்.

இந்தச் சான்று சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்து, படப்பிடிப்புக்கான அனுமதி பெற வேண்டும். படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தொற்று பாதிப்பில்லை என்ற சான்று கட்டாயம்” என்று உத்தரவிட்டுள்ளார்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 16 ஏப் 2021