மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

மதுக்கடையை எதிர்க்க மக்களுக்கு உரிமை உண்டு: நீதிமன்றம்!

மதுக்கடையை எதிர்க்க மக்களுக்கு உரிமை உண்டு: நீதிமன்றம்!

வருமானத்தை அதிகரிக்க மதுக்கடைகளை அரசு அமைத்தாலும், அதனால் பாதிக்கப்படுபவர்கள் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் கருமலைக்கூடலில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்து அப்பகுதி பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கியதாக 10 பெண்கள் உட்பட பலர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குப் பதிவை ரத்துச் செய்யக் கோரி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 16) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில், இவர்கள் அனைவரும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டார்கள். அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினார்கள். வன்முறையில் ஈடுபட்ட காரணத்தினாலே வழக்கு பதிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.

வருமானத்திற்காக டாஸ்மாக் கடைகள் அமைப்பது கொள்கை முடிவு என்றாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், போராடவும் மக்களுக்கு உரிமை உண்டு என்று கூறிய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 95-ன் கீழ் விதிவிலக்கு அளித்து, டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

வினிதா

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

வெள்ளி 16 ஏப் 2021