மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்?

சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்?

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியளித்தால், அவர்களின் பாதுகாப்பை யார் உறுதி செய்வார்கள் என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், “ ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 30 வரை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் கொரோனா காரணமாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால், சாமி வீதி உலாவை சித்திரை வீதிகளில் நடத்தவும், மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்கவும், பக்தர்கள் இல்லாமல் ஒரு நாள் மட்டும் வைகையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 16) நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே சித்திரை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் விழாக்கள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்களின் நலன் கருதி சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கொடிய நோய் தொற்று பரவி வரும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி அளித்தால் அவர்களை பாதுகாப்பது யார்?. பாதுகாப்பது எப்படி? என கேள்வி எழுப்பினர். மேலும், பொதுநலன் கருதி அனுமதி மறுக்கப்பட்ட விழாவுக்கு மக்களை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் சித்திரைத் திருவிழாவிற்கு யாருக்கும் சிறப்பு பாஸ், விஐபி பாஸ் கொடுக்க வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 16 ஏப் 2021