மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட உத்தரவு!

நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி பாதிப்பு எட்டாயிரத்தை தொட்டுவிட்டது. இந்த நிலையில் இன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் அருங்காட்சியங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்கள் ஆகியவற்றை மூட மத்திய தொழில் துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாடு முழுவதும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மட்டும் அருங்காட்சியங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய தொழில்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வர உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற இடங்கள் திறக்கப்பட்டிருந்தால் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்க அதிகரிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சுற்றுலா வந்துள்ளவர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 16 ஏப் 2021