மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

கொரோனா: ரேஷன் கடைகளில் ரேகை வைக்க தயக்கம்!

கொரோனா: ரேஷன் கடைகளில் ரேகை வைக்க தயக்கம்!

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் கடைக்கு வரும் அனைவரும் விரல் ரேகையைப் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற உணவு பொருட்களும், மண்ணெண்ணெய் போன்றவையும் ரேஷன் கடைகளில் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கு மாதத் தொடக்கத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கு வருவது வழக்கம்.

அத்துடன் பொருட்கள் வாங்குபவர்கள் தங்கள் விரல் ரேகையை பயோமெட்ரிக் எந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது நோய் பரவும் நிலையில் விரல் ரேகையை பதிவு செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்களை வாங்க வந்தவர்கள், “ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்கச் செல்லும்போது முதலில் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவராவது ஒருவர் பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகுதான் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சில நேரங்களில் ஒழுங்காக விரல் ரேகை பதியவில்லை என்றால் திருப்பி அனுப்பப்படும் நிலையும் உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் கடைக்கு வரும் அனைவரும் விரல் ரேகையைப் பதிவு செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்யும்போது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால்கூட அன்று கடையில் உணவு பொருள் வாங்க வரும் அனைவருக்கும் எளிதில் கொரோனா வைரஸ் பரவிவிடும்.

இதனால் தற்போது பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல் ரேகையைப் பதிய தயக்கமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நோய் பரவலைத் தடுக்க தற்காலிக ஏற்பாடாக பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல் ரேகையைப் பதிவதற்குப் பதிலாக மாற்று வழி இருக்கிறதா என்று பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 15 ஏப் 2021