மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

சென்னை:  12 ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் தயார்!

சென்னை:  12 ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் தயார்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னையில், 12 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது,

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் மாநகரம் முழுவதும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில்,  கொரோனா பாதிப்பை சமாளிக்க சென்னையில் கூடுதல்  படுக்கை வசதிகள்  ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள்  சென்னையில் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 4,500 படுக்கைகள், அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,500 படுக்கைகள் சென்னை பல்கலைக் கழகத்தில் 900 படுக்கைகள்,  சென்னை ஐஐடியில் 820 படுக்கைகள், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகள்  கொண்ட கொரோனா தடுப்பு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, ஜவஹர் பொறியியல் கல்லூரி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி உள்ளிட்ட  இடங்களிலும் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கொரோனா தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 83,316 படுக்கைகள் உள்ளன என்றும் அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் படுக்கைகளாக உயர்த்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா உறுதியாகும் நபர்களுக்கு எங்கிருந்து நோய் தொற்று வந்தது என்பதை கண்டறிய சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  கான்டாக்ட் ட்ரேசிங் முறையால் மட்டுமே நோய் தொற்று அதிகரிப்பதை தடுக்க முடியும் என்பதால் அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 15 ஏப் 2021