மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

கொரோனா அச்சம் : ஒரே நாளில் 36 விமானங்கள் ரத்து!

கொரோனா அச்சம் : ஒரே நாளில் 36 விமானங்கள் ரத்து!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அச்சம் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று ஒரே நாளில் 36 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக 18 உள்நாட்டு விமானச் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகரித்து இன்று 36 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட கூடிய 4 பெங்களூர் விமானங்கள், 3 டெல்லி விமானங்கள், 3 மும்பை விமானங்கள், இந்தூர் விமானங்கள் 2, ஹைதராபாத் , புனே, சூரத் மங்களூரு மற்றும் அந்தமான் விமானங்கள் தலா ஒன்று என மொத்தம் 18 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி சென்னைக்கு வரக்கூடிய 18 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த மற்றும் புறப்பட்ட விமானங்களிலும் குறைந்த அளவிலான பயணிகளே பயணித்திருக்கின்றனர்.

-பிரியா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 15 ஏப் 2021