மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

கடலூரில் உடல்கள் மாறியது எப்படி?

கடலூரில் உடல்கள் மாறியது எப்படி?

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா அச்சத்தால் உடல்கள் மாற்றி கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, புவனகிரி பெருமாத்தூரன் வீதியில் வசித்து வந்த ஜாகிர் உசேன் (59) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஏப்ரல் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை மீனாட்சியம்மன் கோயில் வீதியில் வசித்து வந்த ஆறுமுகம்( 51) உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், அவரும் ஏப்ரல் 13ஆம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

பின்னர் இருவரது உடல்களும் , முழுவதும் மூடப்பட்டு, பிணவறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது. நேற்று (ஏப்ரல் 14), கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 80 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டும், 40 பேர் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் சிகிச்சை பெற்று வந்தனர். பிணவறையில் மொத்தம் 8 உடல்கள் இருந்துள்ளது. அதில் இரண்டு பேரின் உடல்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களாகும், ஒரு உடல் கொரோனா இருக்கலாம் என சந்தேகப்பட்டவரின் உடல், மீதமுள்ள உடல்கள் சாதாரணமாக இறந்தவர்களுடையது.

கொரோனா பாதிப்பால் இறந்துபோன ஜாகிர் உசேன் உடலும், ஆறுமுகம் உடலும் ஒரே உயரம் ஒரே கனம் என்பதாலும் முழுவதும் மூடப்பட்டிருந்ததால், அடையாளம் காட்டிய ஜாகிர் உசேன் உறவினர்கள், தூரத்திலிருந்தவாறு அந்த உடல்தான் என்று கைகாட்ட, அவர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸில் ஊழியர்கள் அனுப்பிவைத்தனர். உடல் முழுவதும் மூடப்பட்டிருந்ததால், ஆறுமுகத்தின் உடலை தவறாக எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டனர் ஜாகிர் உசேன் குடும்பத்தினர்,

அதுபோன்று தான் ஆறுமுகம் என கருதி உடலைப் புதுப்பேட்டைக்கு எடுத்து சென்ற போது உறவினர் ஒருவர், முகத்தைப் பார்க்க முயற்சித்திருக்கிறார். அப்போது தான் அந்த உடல், தங்களுடைய உறவினரின் உடல் இல்லை என்பதும் அது வேறு ஒருவருடையது என்பதும் தெரியவந்திருக்கிறது.

உடனே ஆறுமுகம் மகன் சக்தியும் மகள் அனுவும், ‘எங்க அப்பா உடல் எங்கே’ என்று கேட்டு உடலை ஏற்றிவந்த ஆம்புலன்ஸிலியே ஜாகிர் உசேன் உடலை ஏற்றிவிட்டனர்.

பிறகுதான், ஆறுமுகம் உடலை ஜாகிர் உசேன் உறவினர்கள் எடுத்துப்போய் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று தெரியவந்திருக்கிறது. இதையடுத்து ஆறுமுகத்தின் உடலை பெற்று கொடுங்கள் என்று அவரது உறவினர்கள் போராடியிருக்கிறார்கள். அதன் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் புவனகிரி ஜமாத்துகளிடம் பேசியதால், புதைக்கப்பட்ட ஆறுமுகம் உடலை எடுத்து அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. அதுபோன்று ஜாகிர் உசேன் உடலை வாங்கி அடக்கம் செய்திருக்கின்றனர்.

மேலும், ஆறுமுகத்தின் உடலை இரவு சுமார் 8.00 மணிக்குப் புதுப்பேட்டைக்கு எடுத்து வந்து அவரது உறவினர்கள் அடக்கம் செய்திருக்கின்றனர்.

கொரோனா தொற்றால் இறந்துபோனவரின் உடல் அருகில், உறவினர்களும் நெருங்கப் பயந்துகொண்டு தூரத்திலிருந்து தோராயமாக, ’அதுதான் எங்கள் உறவினர் உடல்’ என்று கேட்டதும் , பிணவறையில் பணியிலிருந்த ஆண் செவிலியர் உதவியாளரும், துப்புரவுத் தொழிலாளியும் உடல் அருகில் செல்ல பயந்துகொண்டு உறவினர்கள் சொன்ன உடலையே எடுத்துக் கொடுத்துவிட்டதால்தான் இவ்வளவு குழப்பத்துக்கும், பிரச்சினைக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.

-வணங்காமுடி

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 15 ஏப் 2021