மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி - புதினா ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி - புதினா ஜூஸ்!

கோடைக்காலத்தில் ஓர் உணவு வேளைக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஃபிரெஷ் ஜூஸ் அருந்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் கிடைக்கும். அதற்கு இந்த அன்னாசி - புதினா ஜூஸ் உதவும்.

எப்படிச் செய்வது?

200 கிராம் அன்னாசிப்பழத் துண்டுகள், 10 கிராம் புதினா, தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்தலாம்.

சிறப்பு

வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்த ஜூஸ் இது. பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமலுக்கும் ஆஸ்துமாவுக்கும் நல்லது. தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம். தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 15 ஏப் 2021