மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

கோவை குற்றாலம்: 750 பேருக்கு மட்டுமே அனுமதி!

கோவை குற்றாலம்: 750 பேருக்கு மட்டுமே அனுமதி!

கொரோனா பரவல் காரணமாக கோவை குற்றாலத்தில் வார நாட்களில் இனிமேல் 750 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமாக இருக்கிறது. நேற்று மட்டுமே 7,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, 25 பேர் பலியாகியுள்ளனர். கோவையில் மட்டும் ஒரே நாளில் 540 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுவதுதான் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சித்திரை முதல் நாளை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) கோவை குற்றலாத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். அங்கே 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பெரும்பாலோனார்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ” தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு கோவை குற்றாலத்தில் விடுமுறை நாட்களில் 1,000 பேருக்கும், மற்ற வார நாட்களில் 750 பேருக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 750 பேரும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை 150 பேர், அதுபோன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை 150 பேரும், நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை 150 பேரும், பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை 150 பேரும், பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணிவரை 150 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். விடுமுறை நாட்களில் ஒரு குழுவில் 200 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு, வெப்பநிலை சோதனை செய்ய வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு, அங்கேயும் ஒவ்வொரு பயணிக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கோவை மேற்குத்தொடர்ச்சி மலையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ள பரளிக்காட்டிற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தலா 120 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 15 ஏப் 2021