மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சித்திரை ஸ்பெஷல்: சதசதயம் – கேரளா

கிச்சன் கீர்த்தனா: சித்திரை ஸ்பெஷல்:  சதசதயம் – கேரளா

சித்திரை பிறப்பு கேரளத்தில் ‘விஷு’ என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது. பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க - வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள், பழ வகைகள், காய் வகைகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றைப் பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும், அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இது ‘விஷுக் கணி’ (விஷுக் காட்சி) எனப்படுகிறது. பிறகு கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிறியவர்கள், பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். அவர்களைப் பெரியவர்கள் ஆசீர்வதிப்பார்கள். அன்றைய தினம் வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு. இதை ‘விஷுக் கை நீட்டம்’ என்பர். விஷு நாளில் சதசதயம் முக்கிய இடம் வகிக்கும். நீங்களும் இன்று இதை செய்து மகிழலாம்.

என்ன தேவை?

அரிசி - ஒரு கப்

பயத்தம்பருப்பு - அரை கப்

துருவிய வெல்லம் - ஒன்றே கால் கப்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

நெய், முந்திரி - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தண்ணீரில் அரிசியையும் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்துக் குழைய வேகவைக்கவும். வெந்தபின் துருவிய வெல்லம் சேர்த்து முழுவதும் கரையும்வரையில் குறைந்த தணலில் வேகவிடவும். கடைசியில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: பால் பாயசம் – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 15 ஏப் 2021