மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

வருகிற 18ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மிகப்பெரிய ஒரு தொகையினை, ஒரு வங்கியின் கிளையில் இருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் ஒரு வங்கி சேவைதான் இந்த (Real-Time Gross Settlement - RTGS) ஆர்டிஜிஎஸ். இதன் மூலம் மிகப்பெரிய தொகையையும் வாடிக்கையாளர்கள் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

என்இஎஃப்டி (National Electronic Funds Transfer - NEFT) சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், ஆர்டிஜிஎஸ் சேவையைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நடைமுறையில், ஆர்டிஜிஎஸ் சேவையை வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி வரை பணப்பரிவர்த்தனை நடைபெறாது. அதேநேரம் என்இஎஃப்டி முறையிலான பணப்பரிவர்த்தனை தடையின்றி செயல்படும். இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

புதன் 14 ஏப் 2021