மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தமிழகத்தில் கொரோனாவுக்கு 25 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனாவுக்கு 25 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 7819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த எண்ணிக்கை 9,54,948 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் நேற்று 18 பேர் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 12,970 பேர் உயிரிழந்துள்ளனர்.

3,464 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமானவர்களின் எண்ணிக்கை 8,87,663 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 2,72,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 97,668 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 54,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4,733 பேர் ஆண்கள், 3,086 பேர் பெண்கள். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 32 பேருக்கும், வெளிநாடுகளிலிருந்து வந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 772 பேரும், கோவையில் 540 பேரும், திருவள்ளூரில் 383 பேரும், காஞ்சிபுரத்தில் 124 பேரும், திருச்சியில் 216 பேரும் , மதுரையில் 199 பேரும், சேலத்தில் 175 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்19 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 14 ஏப் 2021