மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

கொரோனா: மாற்றி கொடுக்கப்பட்ட உடல்கள்!

கொரோனா: மாற்றி கொடுக்கப்பட்ட உடல்கள்!

கடலூரில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மாற்றி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த ஜாகிர் உசேன்(59) என்பவர் கொரோனாவுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

அதேசமயம், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(51) என்பவரும் சிகிச்சை பலனின்றி கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் இருவரது உடல்களை வாங்குவதற்காக அவரவரின் உறவினர்கள் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது ஆறுமுகத்தின் உறவினர்கள் ஜாகிர் உசேன் உடலையும், ஜாகிர் உசேன் உறவினர்கள் ஆறுமுகத்தை உடலையும் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

ஆறுமுகத்தின் முகத்தை பார்க்க பிரிக்கும்போதுதான், உடல்கள் மாறியது தெரியவந்தது. இதுகுறித்து புகார் அளித்த உறவினர்கள், உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்டதை எதிர்த்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஜாகிர் உசேன் என்பவரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவரவர் உறவினர்கள் சடலத்தை பெற்றுக் கொண்டு அடக்கம் செய்தனர்.

இதுபோன்ற சம்பவம் வடமாநிலங்களில் அதிகளவில் நடந்து வந்தநிலையில், தற்போது தமிழகத்திலும் நடந்துள்ளது.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 14 ஏப் 2021