மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் மே4 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரையும் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அறிவித்திருந்தது. கொரோனா பரவலின் தாக்கத்தை சுட்டிக் காட்டி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஏப்ரல் 14) பிற்பகல் 12 மணியளவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வித்துறை செயலாளர், மற்றும் பிற முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், மாணவர்களின் நலன்தான் அரசாங்கத்திற்கு முக்கியம். மத்திய அரசு, மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக்கும், உடல்நலனுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கும் என கூட்டத்தில் பிரதமர் பேசியுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ கொரோனா காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்களை எந்த வகையில் வழங்குவது என்பது குறித்து சிபிஎஸ்இ முடிவு செய்யும். அப்படி வழங்கப்படும் மதிப்பெண்கள் ஏதாவது ஒரு மாணவருக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் சென்று முறையிட்டுத் தேர்வு எழுதிக்கொள்ளலாம்.

அதுபோன்று சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து மீண்டும் ஜூன்1 ஆம்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில், தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தேர்வு தேதி முடிவு செய்யப்பட்டால், அதுகுறித்து15 நாட்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப்பாடம் மட்டும் தேதி மாற்றப்பட்டு, மற்ற தேர்வுகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட நாட்களில் நடைபெறும் என அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

புதன் 14 ஏப் 2021