மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

சென்னை: 2 மண்டலங்களில் 2 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா!

சென்னை: 2 மண்டலங்களில் 2 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா!

எந்தவித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருவதால், கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று(ஏப்ரல் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”சென்னையில் இரண்டு மண்டலங்களில் தினசரி கொரோனா தொற்று இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் தேனாம்பேட்டையில் 2109 பேரும், அண்ணாநகரில் 2037 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை யில் 1, 666 ராயபுரம் 1,698, திருவிக நகரில் 1,529, அம்பத்தூர் 1,314, கோடம்பாக்கம் 1,708 ,வளசரவாக்கம் 1,036, அடையாறு 1,155, திருவெற்றியூர் 462 ,மணலி 194 ,மாதவரம் 716 ,ஆலந்தூர் 849 பேருக்கு ஒரே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் காய்ச்சல் முகாம்கள் அதிகமாக்கப்படும்.

அடுத்த மூன்று நாட்களுக்குள் 400 காய்ச்சல் முகாம்களை அமைக்கவுள்ளோம். தற்போது, 12 ஆயிரம் தன்னார்வலர்கள் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி விழிப்புணர்வு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 72 லட்சம் பேரில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னையில் 450 தடுப்பூசி முகாம்கள் உள்ளன. 10 முதல் 15 நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நாளொன்றுக்கு 30,000 முதல் 35,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அடுத்த வாரத்தில் நாளொன்றுக்கு 55,000 முதல் 60,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி ஏதும் இருந்தால் தெரிவிக்க வேண்டும். லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்க 12,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதன் மூலம் கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்.

எந்த வகையான உடல் பிரச்சினைகளுக்கும் முகாமில் வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். வயிற்றுபோக்கு, அதிகமான உடல்சோர்வு, நுகர்திறன் குறைவு உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாலே கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1199 ஆக அதிகரித்துள்ளது.

தேனாம்பேட்டை, அண்ணாநகரில் பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் குறிப்பாக, ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா விதிகளைமீறுவோரிடம் தலா 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 14 ஏப் 2021