மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தேவையற்ற பயணங்களைத் தவிர்த்திடுங்கள்: தெற்கு ரயில்வே!

தேவையற்ற பயணங்களைத் தவிர்த்திடுங்கள்: தெற்கு ரயில்வே!

கொரோனா தொற்று பரவலைத் தடுத்திட தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்த்திடுமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரயிலில் பாதுகாப்பாக பயணித்திட தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தேவையற்ற பயணங்களையும், கூட்டமாகப் பயணிப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட கொரோனாவின் அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்போர், தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தொற்று இருப்போர் ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ரயில் பயணங்களின்போது உணவு, தண்ணீர், கிருமிநாசினி, சோப்பு ஆகியவற்றை சொந்தமாக கொண்டு செல்லவும், பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகள் அரசு அறிவித்தபடி இ-பாஸ், இ-ரிஜிஸ்டிரேஷன், பரிசோதனை போன்றவற்றை பின்பற்றுமாறும் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 14 ஏப் 2021