மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்: செந்தில்

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்: செந்தில்

தடுப்பூசி போட்டுக் கொண்டதால், தனக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை என கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” நான் நடிகர் செந்தில் பேசுறேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உண்மைதான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், யாரும் பயப்பட தேவையில்லை. கொரோனா சோதனை செய்து வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். நான் மாநகராட்சி மூலமாக முன்பே தடுப்பூசி போட்டுக் கொண்டதால், அந்தளவுக்கு பெரிய பாதிப்பு இல்லை. அதனால், அனைவரும் தயங்காமல் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். அது மிகவும் நல்லது. நாளைக்கு அடுத்த டெஸ்ட்டிற்கு மருத்துவர்கள் வர சொல்லியிருக்கிறார்கள். அதில் எனக்கு நெக்டிவ் என்று வந்துவிட்டால், வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என கூறினார்.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 14 ஏப் 2021