மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் அளவு குறைப்பு!

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் அளவு குறைப்பு!

மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ” மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவின்படி அனைத்து மாவட்டத்திற்கும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழங்கப்படுகிறது.

தமிழகத்துக்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தற்போது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளது.

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறித்து குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து புகார்கள் வராமல் தவிர்க்கும் பொருட்டு, தங்கள் மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாய விலைக்கடைகளிலும், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. தற்போது கிராமப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதன் அடிப்படையில் நியாய விலை கடைகளில் ஒதுக்கீடு அளவை விளம்பரப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 14 ஏப் 2021