மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

பணி நிரந்தரம், ஊதிய நிர்ணயம் கோரி அடுத்த (மே) மாதம் 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தில் சுங்கம் வசூலிக்கும் பணிகளில் 10 முதல் 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களையும் பணிவரன் முறைப்படுத்தி, பணிப் பாதுகாப்பும் ஊதியம் நிர்ணயமும் செய்திடல் வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பலன்களும் பாதுகாப்பும், 450 நாட்களும் அதற்கு மேலாக தொடர் பணியில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கி சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அமலாக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து சுங்கச்சாவடி மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஒரே சீரான சம்பளமும், சலுகைகளும் நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மாறும்போது பணியாளர்களிடம் புதிய நிபந்தனைகளை விதிப்பது, தொழிலாளர்களை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்துவது, ஆண்டுதோறும் வேலை கோரி புதிய விண்ணப்பம் அளிக்கும்படி சட்டவிரோத நிர்பந்தப்படுத்துதல் நிறுத்தப்பட வேண்டும்.

தானியங்கி சுங்க வசூல் முறை அமலுக்குக் கொண்டு வரப்படும்போது பணியாளர்கள் யாரையும் ஆட்குறைப்பு செய்யாமல் சுங்க வசூல் பிரிவில் உள்ளவர்களுக்கு சாலை பராமரிப்பு மாற்றுப்பணி வழங்க வேண்டும்” என்றும்

பணி நிரந்தரம், ஊதிய நிர்ணயம் பணியிட பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட கோரியும் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுப்பது என்றும் மே 15ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகள் ஆணையம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தவறினால் மே 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமாந்துறை மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மேற்கண்ட சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க யாரும் இல்லை. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை - திருமாந்துறை சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் இலவசமாகச் சென்றனர். பின்பு சமரசப் பேச்சு வார்த்தைக்குப் பின் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 13 ஏப் 2021