மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

தமிழகம் : 7 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

தமிழகம் : 7 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 9,47,129 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் நேற்று 19 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை12,945 பேர் உயிரிழந்துள்ளனர்.

3,289 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமானவர்களின் எண்ணிக்கை 8,84,199 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 2,482 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 2,69,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 83,332 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 49,985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4,203 பேர் ஆண்கள், 2,781 பேர் பெண்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 25 பேருக்கும், வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 771 பேரும், கோவையில் 504 பேரும், திருவள்ளூரில் 285 பேரும், காஞ்சிபுரத்தில் 204 பேரும், திருச்சியில் 199 பேரும் , மதுரையில் 254 பேரும், நெல்லையில் 220 பேரும், குமரியில் 124 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 16 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 13 ஏப் 2021