மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

கோயில்களில் திருமணம்: 10 பேருக்கு மட்டுமே அனுமதி!

கோயில்களில் திருமணம்: 10 பேருக்கு மட்டுமே அனுமதி!

கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என இந்து அறநிலையத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், திரையரங்குகள், பூங்காக்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி. திருமணத்தில் 100 பேருக்கும், இறப்புகளில் 50 பேருக்கும் மட்டுமே அனுமதி உள்ளிட்ட 20 கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் இந்து அறநிலையத் துறை கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்துக்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும்.

மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில், பொது மக்கள் வழிபாடு இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

செவ்வாய் 13 ஏப் 2021