மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

மங்களகரமான நாட்களில் கூடுதல் கட்டணம்!

மங்களகரமான நாட்களில் கூடுதல் கட்டணம்!

மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மங்களகரமான நாட்களாக கருதப்படும் சித்திரை முதல்நாள் மற்றும் ஆடிப்பெருக்கு நாட்களின்போது புதிதாக நிலம் வாங்குதல், பத்திரப்பதிவு போன்றவற்றை செய்வார்கள். ஆனால், அந்த நாட்களில் அரசு விடுமுறை என்பதால் பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படாது.

இதுகுறித்து வணிக வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “வணிக வரி மற்றும் பதிவுத் துறையின்‌ வருவாயை பெருக்கும்‌ நோக்கில்‌, சித்திரை முதல்‌ தேதி, ஆடிப்பெருக்கு மற்றும்‌ தைப்பூசம்‌ ஆகிய மங்களகரமான நாட்களில்‌ பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும்.

அதன்‌ அடிப்படையில்‌‌, சித்திரை முதல்‌ தேதி , ஆடிப்பெருக்கு மற்றும்‌ தைப்பூசம்‌ ஆகிய மங்களகரமான நாட்களில்‌ பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு பதிவு சட்டத்தின் கீழ் உள்ள Table Fees இல் கூறப்பட்டவாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 13 ஏப் 2021