மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

நடிகர் செந்தில் குடும்பத்துக்கு கொரோனா!

நடிகர் செந்தில் குடும்பத்துக்கு கொரோனா!

காமெடி நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படங்களில் நடித்து வந்த செந்தில் சமீப காலமாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் இருந்த நடிகர் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, சோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி,மகன், மருமகள் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் நடிகர் செந்தில், தனது குடும்பத்தினருடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல்நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாகவும், சிகிச்சை முடிந்து மூன்று தினங்களில் வீடு திரும்புவார்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலைக்கு திரைப்பட பிரபலங்களும், அரசியலில் உள்ளவர்களும் அதிகளவில் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 13 ஏப் 2021