மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

பிளஸ் 2 தேர்வு: 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

பிளஸ் 2 தேர்வு: 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா, படாதா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த மொழித் தேர்வு மட்டும் மே 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு, இதர தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாள்களிலேயே நடைபெறும் எனநேற்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு உறுதியாக நடக்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் இன்று(ஏப்ரல் 13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பொதுத்தேர்வு நடைபெறும்போது தேர்வுகளில் எதுவும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த கண்காணிப்பு குழுக்களை நிர்வாகம் செய்ய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடநூல் கழக தலைவர் ஜெயந்தி, டி.ஆர்.பி தலைவர் நிர்மல்ராஜ், சமக்ர சிக்ஷா மணிலா திட்ட இயக்குனர் லதா, உதவி திட்ட இயக்குனர் அமிர்தஜோதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் போது பறக்கும் படையுடன் கல்வி அதிகாரிகள் சென்று பார்வையிடுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அரசின் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அரசு ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். உத்திரமேரூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், “கடந்த சில மாதங்களாக மாணவர்களை பொதுத் தேர்விற்காக தயார் செய்திருக்கிறோம். இந்த நேரத்தில் தேர்வை தள்ளி வைக்கவோ ரத்து செய்யவோ முடிவு செய்தால் மாணவர்கள் ஆசிரியர்கள் என இரு தரப்பும் பாதிக்கப்படுவோம். மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிப்பது பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள்தான். ஆதலால் தற்போதுள்ள கொரோனா பரவல் சூழல் ஒருபுறம் கவலை அளித்தாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தி முடிப்பதே நல்லது” என தெரிவித்துள்ளார்.

வினிதா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 13 ஏப் 2021