மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சித்திரை ஸ்பெஷல்: சுகியன் – ஆந்திரா

கிச்சன் கீர்த்தனா: சித்திரை ஸ்பெஷல்: சுகியன் – ஆந்திரா

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு பண்டிகையான ‘யுகாதி’ இன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் ஒவ்வொரு வருடமும் இதைச் சிறப்பாகக் கொண்டாடுவர். மராட்டியர்கள் ‘குடிபாட்வா’ என்றும், சிந்தி இன மக்கள் ‘சேதி சந்த்’ என்றும் இதே தினத்தில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.

பஞ்சாபில் ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு பிறக்கிறது. ஒடிசாவிலும் மணிப்பூரிலும்கூட இதே நாள்தான். இமாசலப்பிரதேச மக்களும் ஏப்ரலில்தான் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். அஸ்ஸாமில் இது ஏப்ரல் 14 அல்லது 15 ஆக இருக்கிறது. நேபாளப் புத்தாண்டும் ஏப்ரல் 12 - 15 தேதிகளுக்குள்தான் வருகிறது.

மேற்கு வங்காளம், திரிபுராவோடு சேர்ந்து பங்களாதேஷும் ஏப்ரல் 14 - 15 தேதிகளில் வங்கப் புத்தாண்டைக் கொண்டாடுகிறது. இந்தத் திருநாளில் இப்பகுதி மக்களின் உணவில் சுகியன் முக்கிய இடம்பிடிக்கும்.

என்ன தேவை?

புழுங்கலரிசி - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - ஒரு கப்

எண்ணெய் - பொரித்தெடுக்க

உப்பு - கால் டீஸ்பூன்

பூரணம் செய்ய

துருவிய தேங்காய் - ஒரு கப்

துருவிய வெல்லம் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசியையும் பருப்பையும் ஒன்றாக தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். போதிய அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு மாவை அரைத்துக்கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

தேங்காய், வெல்லம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு வாணலியில் சூடாக்கி, வெல்லம் முழுமையாகக் கரைந்து கலவை கெட்டியாகும் வரையில் சீராகக் கிளறிவிடவும். அத்துடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து எலுமிச்சைப்பழ அளவு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, ஒவ்வோர் உருண்டையையும் அரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நேற்றைய ஸ்பெஷல்: ஒப்பட்டு – கர்நாடகா

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

செவ்வாய் 13 ஏப் 2021