மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

பிளஸ் 2: மொழிப்பாடம் தேதி மாற்றம்!

பிளஸ் 2: மொழிப்பாடம் தேதி மாற்றம்!

தமிழகத்தில் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பனிரெண்டாம் வகுப்பு மொழிப்பாடம் மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பனிரெண்டாம் வகுப்பு தவிர 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி அளித்து விடுமுறை அளிக்கப்பட்டது.

பொதுத் தேர்வு எழுத கூடிய பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வாரத்தில் ஐந்து நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி பெற்றோர்களும், ஆசிரியர்களும் பொதுத் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

கொரோனா அதிகரித்து வருவதற்கு மத்தியில் மே 3 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. மேலும், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

அதனால், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா, நடைபெறதா என்ற கேள்வி மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும், இருந்தது.

இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் (ஏப்ரல் 12) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த பனிரெண்டாம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மொழிப்பாடம் தவிர மற்ற பாடங்கள் திட்டமிட்டப்படி நடைபெறும்.

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். முதல் 15 நிமிடங்கள் மாணவர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்கவும், வினாத்தாளை வாசிப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்வு கால அட்டவணை

மே 5 - ஆங்கிலம்

மே 7 - கணினி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

மே 11 - இயற்பியல் , பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்

மே 17 - கணிதம், விலங்கியல், வேளாண் அறிவியல், நர்சிங், ஆடை வடிவமைப்பு

மே 19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை

மே 21 - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

திங்கள் 12 ஏப் 2021