மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

இன்றைய நிலவரம்: 6,711 பேருக்கு கொரோனா!

இன்றைய நிலவரம்: 6,711 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 9,40, 145 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று 22 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை12,927பேர் உயிரிழந்துள்ளனர்.

2,339 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமானவர்களின் எண்ணிக்கை 8,80,910 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 2,105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 2,67,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 82,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 46,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4,036 பேர் ஆண்கள், 2,675 பேர் பெண்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கும், வெளிநாடுகளிலிருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 611 பேரும், கோவையில் 604 பேரும், திருவள்ளூரில் 333 பேரும், காஞ்சிபுரத்தில் 277 பேரும், திருச்சியில் 184 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

திங்கள் 12 ஏப் 2021