மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

பணியிடமாற்றம் களங்கம் கிடையாது!

பணியிடமாற்றம் களங்கம் கிடையாது!

குற்றம் சாட்டப்பட்டவரின் பணியிடமாற்ற நடவடிக்கையை களங்கமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் மூத்த வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் சீனிவாசன். இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து வழக்கறிஞர்கள் வாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாட்சிகளை கலைக்க கூடும் என்ற அடிப்படையில், சீனிவாசனை சேலத்திலிருந்து திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று(ஏப்ரல் 12) நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சாட்சிகளை கலைக்க கூடும் என்பது வெறும் யூகம், பணியிட மாற்றம் களங்கம் ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.

நிர்வாக அடிப்படையில் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக் கூறமுடியாது எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு பதிலாக பணியிட மாற்றம் செய்யலாம், அந்த நடவடிக்கையை களங்கமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டினார். மனுதாரர் சீனிவாசனுக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்து மே மாத இறுதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 12 ஏப் 2021