மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

மீண்டும் அவசர கால கட்டுப்பாட்டு மையம்!

மீண்டும் அவசர கால கட்டுப்பாட்டு மையம்!

தமிழகத்தில் மீண்டும் அவசர கால கட்டுப்பாட்டு மையம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கொரோனா தொற்று தாக்கம் அதிகமாக இருந்தபோது, கொரோனா குறித்த சந்தேகங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணிநேரமும் செயல்படுகிற அவசர கால கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டது. அங்கு, கொரோனா பரிசோதனை, பாதிப்பு, உயிரிழப்பு விவரங்கள், படுக்கை வசதிகள், தனிமைப்படுத்தலில் இருப்பவர்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து, அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்படாமல் இருந்தது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் மோசமாக இருப்பதால், மீண்டும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சுகாதார துறை இயக்குனர் அலுவலகத்தில் நோய்தொற்று கண்காணிப்பு பிரிவு, ஆய்வக பிரிவு, 24 மணி நேர கால்சென்டர் பிரிவு ஆகியவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு, கொரோனா தொற்று, தடுப்பூசி குறித்த விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அதிகரிக்கும் கட்டுப்பாட்டு பகுதிகள்

ஒரே தெரு­வில் மூன்று பேருக்­கும் அதி­க­மா­னோர் கொரோனா ­தொற்று பாதிக்­கப்­பட்­டால், அந்த தெரு அடைக்­கப்­பட்டு கட்­டுப்­பாட்டு பகு­தி­யாக அறி­விக்­கப்படும். அதன்படி, சென்­னை­யில் நேற்று 931ஆக இருந்த கட்­டுப்­படுத்­தப்­பட்ட பகு­தி­க­ளின் எண்­ணிக்கை இன்று 1,106ஆக அதி­க­ரித்­துள்­ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 173 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 146 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக இருப்பதாகவும் குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் கட்டுபாட்டு மையங்களாக 8 தெருக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2.78 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரைத் தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டும் ரூ. 2,52,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு காவல்துறை மண்டலத்தில் மட்டும் ரூ.85.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போல இந்தாண்டும் அனைத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதை பார்க்கும்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமோ என்ற கேள்வி அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 12 ஏப் 2021