மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

கோவை எஸ்.ஐ: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கோவை எஸ்.ஐ: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கோவை உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் குறித்து விளக்கமளிக்க கோவை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்றிரவு(ஏப்ரல் 11) கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் இரவு 10 மணிக்கு மேல் சாப்பிட்டு கொண்டிருந்த மக்களை, அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் லத்தியால் தாக்கினார். இதில், பெண் உள்பட பலரும் காயமடைந்தனர். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர் புகார் கொடுத்திருந்தார். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான இச்சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியானது.

இந்த தாக்குதல் நடத்திய காட்டூர் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு உதவி ஆய்வாளர் முத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சியில் வெளியான செய்தியை பார்த்து, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம். இந்த சம்பவத்தை கண்டித்து மாநில மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், இந்த சம்பவத்திற்கு கோவை மாநகர காவல் ஆணையர் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

”இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக் கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளச் சம்பவத்தை நினைவுப்படுத்துகிறார்களா? பதிலளிப்பது அரசின் கடமை ”என நடிகர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

திங்கள் 12 ஏப் 2021