மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

கொரோனா: மீண்டும் காணொலி வாயிலாக விசாரணை!

கொரோனா: மீண்டும் காணொலி வாயிலாக விசாரணை!

உச்ச நீதிமன்றத்தில் 50 சதவீத பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வழக்குகள் இன்று முதல் காணொலி வாயிலாக விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 55,411 பேருக்கும், சத்தீஸ்கரில் 14,098 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 12,748 பேருக்கும் நேற்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற பணியாளர்கள் 50 சதவீத பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்குகளை வீட்டிலிருந்தபடியே காணொலி வாயிலாக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

வரவிருக்கும் நாட்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மிக முக்கியமானவை. ஏனென்றால், தலைமை மாற்றத்திற்கான நேரம் இது. தலைமை நீதிபதி போப்டே ஏப்ரல் 23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா ஏப்ரல் 24 அன்று பதவியேற்கிறார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அவசர அடிப்படையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், வழக்குகளை நேரடியாக விசாரிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. காணொலி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்படும். மேலும், உச்ச நீதிமன்றம் வளாகம்,அறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருவதால், இன்று ஒவ்வொரு வழக்கின் விசாரணைகளும் 1 மணிநேரம் கால தாமதமாக நடைபெறும். காலை 10.30 மணிக்கு கூட வேண்டிய அமர்வு 11 மணிக்கும், 11 மணிக்கு கூட வேண்டிய அமர்வு 12 மணிக்கும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டே உட்பட சில நீதிபதிகள் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்து காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 12 ஏப் 2021