மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

கோவை: மக்களை தாக்கிய போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

கோவை: மக்களை தாக்கிய போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

கோவை காந்திபுரத்தில் உணவகத்தில் வாடிக்கையாளர்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக உணவகங்கள், டீ கடைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, இரவு 11 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று(ஏப்ரல் 11) இரவு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் இரவு 10.20 மணியளவில் சிலர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள் மற்றும் கடை ஊழியர்களை லத்தியால் தாக்கியுள்ளார். இதில் பெண் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். 10 மணிக்கு மேல் கடையை திறந்து வைக்கக் கூடாது என மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

இதுகுறித்து உணவக உரிமையாளர் மோகன்ராஜ் கூறுகையில், ” இரவு 11 மணி வரை 50 சதவீதம் பேருடன் இயங்க உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடையை மூடுவதற்கு நேரம் இருக்கும்போது கடையை மூடக் கூறி மிரட்டியதும் இல்லாமல், வாடிக்கையாளர்களையும் போலீசார் தாக்கினார். அதனால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, தாக்குதல் நடத்திய காட்டூர் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு உதவி ஆய்வாளர் முத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 12 ஏப் 2021