மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரண நிதி!

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரண நிதி!

கொரோனா கால சிறப்பு நிவாரண நிதியாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் 7 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 22 பேர் பலியாகியுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தாலும், கொரோனா பரவல் குறைவதாக தெரியவில்லை. பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி , கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த திருவிழாக்களை நம்பிதான் பல நாட்டுப்புற, நாடக கலைஞர்கள் உள்ளனர். கடந்தாண்டும் இதேமாதிரி தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த முறையும் தடை விதித்தால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது. அதனால், போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என நாடக கலைஞர்கள் தெரிவித்திருந்தனர். இதை மின்னம்பலத்தில்திருவிழாவுக்கு தடை: நாடக கலைஞர்கள் போராட்டத்துக்கு அழைப்பு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரண நிதி வழங்க அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 12) தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். அதன்படி, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 6,810 கலைஞர்களுக்கு இந்த நிவாரண நிதி கிடைக்கும். உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் வாரியத்தில் புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்.

மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க ஏதுவாக முறையே முதல் தவணையாக ரூ. 3,73,85,000 நிதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

திங்கள் 12 ஏப் 2021