மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

முதல்நாளில் 27 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி!

முதல்நாளில் 27 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று மட்டும் 27 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தடுப்பூசி. தடுப்பூசி போடுவதை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14 வரை இந்தியா முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி , நான்கு நாள் தடுப்பூசி திருவிழா நேற்று(ஏப்ரல் 11) தொடங்கியது.

முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையில் அதிகமான மக்கள் ஆர்வமுடன் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை கூறுகையில், தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் இரவு 8 மணி வரை 27,69,888 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வழக்கமாக 45,000 கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். நேற்று இந்த மையங்களின் எண்ணிக்கை 63,800 ஆக அதிகரிக்கப்பட்டது.

சராசரியாக, ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை(16 லட்சம்) குறைவாக இருப்பது வழக்கம். ஆனால் தடுப்பூசி திருவிழாவின் (டிக்கா உத்சவ்) முதல் நாளில், 27 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதில், 25,47,691 பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும், 2,22,197 பேர் இரண்டாவது டோஸையும் எடுத்துக் கொண்டனர்.

முதல் டோஸை எடுத்துக் கொண்ட 16,73,140 பேரும், இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட 35,127 பேரும் 45-60 வயதை உடையவர்கள். அதுபோன்று, முதல் டோஸை பெற்றுக்கொண்ட 8,25,101 பேரும், இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்ட 1,37,314 பேரும் 60 வயதை தாண்டியவர்கள். இதனுடைய இறுதி அறிக்கைகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

திங்கள் 12 ஏப் 2021