மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

மக்கள் கூட்டத்தை கண்காணிக்க உத்தரவு!

மக்கள் கூட்டத்தை கண்காணிக்க உத்தரவு!

பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பேருந்துகளில் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும், நின்று கொண்டு பயணிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,சென்னையில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில இடங்களில் கட்டுப்பாடுகளைத் தாண்டி அதிகமான பயணிகளை ஏற்றும் நடத்துநர், ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ மாநகர பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கேற்ப மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர்களுக்கு அந்தந்த கிளை மேலாளர், உதவி கிளை மேலாளர், போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

முக்கிய பேருந்து நிலையங்களில், அதிகளவிலான மக்கள் கூடி நிற்பதை தவிர்க்கும் வகையில் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பேருந்துகளில் அவர்களை ஏற்றி அனுப்பிவிட வேண்டும். தேவை இருக்கும்பட்சத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிகாரிகள் பணியில் இருந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 200 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போடவில்லை. அடுத்த மூன்றுநாட்களில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

திங்கள் 12 ஏப் 2021