மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

சென்னை அதானி துறைமுகம்: ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்துக்கு ஆபத்து!

சென்னை அதானி துறைமுகம்: ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்துக்கு ஆபத்து!

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில், அதானி குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அதானி நிறுவனத்துக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகம் 53,000 கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக 320 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் அளவுக்கு விரிவாக்கம் செய்து வருகிறது.

பல்லுயிர்த் தன்மைக்குக் கேடு விளைவிக்க உள்ள இந்தக் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டே ஆக வேண்டும் என்று பழவேற்காடு பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், “சென்னை, எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும்'' எனத் தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் முழங்கி வருகின்றன என்றாலும் திட்டத்தை கைவிடாமல் விரிவாக்கப் பணிகள் தொடர்கின்றன.

இந்த நிலையில், சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா என்னும் தீவில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து ராக்கெட்டுகளும் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தத் தீவில் கடந்த சில மாதங்களில் சுமார் 200 முதல் 300 மீட்டர் நீளத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு இருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

இதற்கு காரணம் சென்னையில் உள்ள துறைமுகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்முறிவு எனப்படும் கட்டுமானங்கள்தான் என்று தெரியவந்துள்ளது. இந்த கடல் அரிப்பை தேசிய, மத்திய கடற்கரை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

எனவே அதானி வசம் உள்ள சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தை எந்த காரணத்தை கொண்டும் விரிவுப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று சுற்றுசூழல் துறை ஆர்வலர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுகின்றனர்.

கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த காற்று அழுத்தமும் கடல் அரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு செயற்கை கடற்கரை அல்லது துறைமுகம் அமைக்கப்படும்போது, தெற்கு பகுதியில் மணல் குவிந்து வடக்கு பகுதியில் மண் அரிப்பு ஏற்படும் என்பது சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மெரினா கடற்கரை நிர்மாணம் செய்யப்பட்டபோது. திருவொற்றியூரில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குக் கடல் புகுந்ததையும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கிராமம் ஒன்று அழிந்ததையும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-ராஜ்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

ஞாயிறு 11 ஏப் 2021