மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

கோடையைச் சமாளிக்க கிருஷ்ணா நதிநீர்!

கோடையைச் சமாளிக்க கிருஷ்ணா நதிநீர்!

கோடையின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருகிற மே மாதம் கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படுகிறது என்றும் ஆந்திர மாநில அரசு மாதம் ஒரு டிஎம்சி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க இருப்பதாகவும் பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டிஎம்சி. தண்ணீரும் என மொத்தம் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

அதன்படி கடந்த ஆண்டு முதல் தவணையாக 2 டிஎம்சி தண்ணீரை மட்டும் தமிழகத்துக்கு ஆந்திர அரசு வழங்கியுள்ளது. அதன்பிறகு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் தற்போது வரை 20 கன அடி மட்டுமே தண்ணீர் வருகிறது.

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக 11, 757 மில்லியன் கன அடி (11.7 டிஎம்சி) கொள்ளளவு கொண்ட பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் உள்ள நீர் இருப்பு விரைவாக குறைந்து வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் 11 டிஎம்சி நீர் இருப்பு இருந்த இந்த ஏரிகளில், தற்போது 9,073 மில்லியன் கன அடி (9 டிஎம்சி) மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

தற்போது இந்த ஆண்டுக்கான முதல் தவணையாக கிருஷ்ணா நதி நீரை வழங்கும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆந்திர மாநில அரசு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருகிற மே மாதம் முதல் வாரத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்படுகிறது.

இந்த நீர் மே மாதம் இரண்டாவது வாரம் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தில் உள்ள ‘ஜீரோ பாயிண்ட்’டை வந்தடையும்.

சென்னை மாநகருக்கு மாதம் சராசரியாக ஒரு டிஎம்சி தேவைப்படுவதால் மாதம் ஒரு டிஎம்சி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க உள்ளனர். தற்போதைய இருப்பு மூலம் அடுத்த ஒன்பது மாதத்துக்கு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

சராசரியாக ஒரு நாளைக்கு 830 கன அடி வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வர இருக்கிற நாட்களிலும் கோடை வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் குடிநீர் தேவையும் அதிகரிக்கும். அதேபோல் ஏரிகளில் உள்ள நீரும் விரைவில் ஆவியாகி விடும். இருந்தாலும் நடப்பாண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இல்லாத கோடையாக கொண்டு செல்ல முடியும்.

மேற்கண்ட தகவல்களை தமிழகப் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

ஞாயிறு 11 ஏப் 2021