மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

ரயில் சேவை குறைக்கப்படுமா?

ரயில் சேவை குறைக்கப்படுமா?

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் உள்ள சில நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் சேவை குறைக்கப்படலாம் அல்லது கடந்த ஆண்டைப்போல நிறுத்தப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் இந்த அச்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில்வே வாரியத் தலைவர் சுனீத் சர்மா விளக்கமளித்துள்ளார்.

“ரயில் சேவையைக் குறைக்கவோ, நிறுத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை. தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும். எனவே, பீதி அடையத் தேவையில்லை. கூட்ட நெரிசல் காரணமாக ரயில்கள் அதிகம் தேவைப்பட்டால், குறுகிய இடைவெளியில் கூடுதலாக ரயில்களை இயக்க முடியும். எனவே பயப்பட வேண்டாம்.

கோடைக்காலங்களில் வழக்கமாக ரயில்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். நெரிசலைத் தவிர்க்க கூடுதலாக ரயில்களை அறிவித்துள்ளோம். அதனால் ரயில்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவைப்பட்டால், இன்னும் அதிக ரயில்கள் இயக்கப்படும் என்று ஒவ்வொருவருக்கும் உறுதி அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் “ரயில்களில் பயணிக்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையைக் குறைப்பதற்கோ, நிறுத்துவதற்கோ அந்த மாநில அரசு எங்களுக்குக் கோரிக்கை விடுக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 11 ஏப் 2021