மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

கொரோனா விதிமீறல்: 1,118 வழக்குகள் பதிவு!

கொரோனா விதிமீறல்: 1,118 வழக்குகள் பதிவு!

சென்னையில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக 1,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகமா பரவுகிறது. சென்னையில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1100ஐ தாண்டியுள்ளது. அதனால், புதிதாக கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200ம், சமூக இடைவெளி பின்பற்றாதது, பொதுஇடங்களில் எச்சில் துப்புதல் உள்ளிட்டவற்றிற்கு தலா ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராதமும், ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை அண்ணாசாலையில் இன்று முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் கண்டித்து, முகக்கவசம் அணியுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த முறை விடுவதாகவும், அடுத்தமுறை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 659 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 1,22,100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 8ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் வந்த 1,118 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 2,12,400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சமூக இடைவெளியை பின்பற்றாத நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலா ரூ.500 வீதம் ரூ.2000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

வினிதா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 11 ஏப் 2021