மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

அனுமதி பெறாத தண்ணீர் லாரிகள்: நீதிமன்றம் உத்தரவு!

அனுமதி பெறாத தண்ணீர் லாரிகள்: நீதிமன்றம் உத்தரவு!

உரிய அனுமதி பெறாத தண்ணீர் லாரிகள் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "எங்கள் சங்கத்தில் 425 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் 2,000 லாரிகள் மூலமாக சென்னை மக்களுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தண்ணீர் விநியோகித்து வருகிறோம். விவசாயத்துக்குப் பயன்படாத கிணறுகளிலிருந்துதான் தண்ணீர் எடுத்து செல்கிறோம். ஆனால், ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து வருவதாகக் கூறி அதிகாரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (ஏப்ரல் 10) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தண்ணீர் எடுக்கவும், லாரிகளில் கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல் பெற்ற லாரிகளுக்கு எதிராக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், உரிய ஒப்புதலைப் பெற்ற உரிமையாளர், அதற்கான ஆதாரங்களுடன் நீர் எடுத்துச் செல்ல அனுமதி கோரி அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். உரிய ஒப்புதல்களைப் பெறாத தண்ணீர் லாரிகள் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 11 ஏப் 2021