மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

கொரோனா: கோயில்களில் கட்டுப்பாட்டு விதிகள்!

கொரோனா: கோயில்களில் கட்டுப்பாட்டு விதிகள்!

கோயில்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து இந்து அற நிலையத் துறை ஆணையர் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதில், வழிப்பாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த உத்தரவில் சிறிது தளர்வு அளித்து இரவு 10 மணி வரை வழிப்பாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி வழங்கலாம் என நேற்று அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்து அறநிலையத் துறை ஆணையர் ரமண சரஸ்வதி, அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “ கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பக்தர்கள் கால்களை சுத்தம் செய்த பின் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

பக்தர்கள் தங்கள் காலணிகளை தங்களுடைய வாகனத்திலேயே விட்டு வருவது நல்லது.

கோயிலுக்குள் நுழையவும், வெளியேறவும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாயில்கள் இருந்தால், உள்ளே வருவதற்கு ஒரு வழியாகவும், வெளியே செல்வதற்கு மற்றொரு வழியாகவும் அனுமதிக்க வேண்டும். மற்ற வாயில்களை பூட்டி வைக்க வேண்டும்.

பக்தர்கள் சிலைகளை தொடக் கூடாது.

நோய் தொற்றினை கருத்தில் கொண்டு இயல்பு நிலை திரும்பும் வரை பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் போன்ற மெய்வருத்தி செய்யும் வேண்டுதல்களை தவிர்க்க வேண்டும்.

100 ச.மீ அல்லது 1075 சதுர அடிக்கு 20க்கும் மேற்பட்ட பக்தர்களை அனுமதிக்கக் கூடாது. திருமண விழாக்களுக்கு 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை என்று விளம்பர பலகை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 11 ஏப் 2021